இன்று காலையில் புறப்படும்போது மணி 9ஐ நெருங்கி கொண்டு இருந்தது . . . எங்கள் வீட்டில் இருந்து மெயின் ரோட்டை தொடவே கால்மணி நேரம் ஆகும் . சென்னையில் எல்லா மெயின் ரோடுகளையும் போல இந்த மெயின் ரோடும் பரபரப்பாகவே இருந்தது ...
என் முழு பயணத்தையும் சொல்வதற்கு தனி பிளாக் ஆரம்பிக்க வேண்டும் , ஆனால் இங்கு லேபிள் முன்னரே கொடுத்தது போல ஒரே ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன்,.
மவுண்ட் ரோடு நந்தனம் சிக்னலில் நின்றுகொண்டிருகிறேன் அந்த சிக்கலான ட்ராப்பிக்கிலும் கிடைத்த
சின்ன சின்ன சந்துகளிலும் புகுந்து அப்போது என்னை தாண்டி ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு பையன் ஓட்ட ஒரு பெண்மணி பின்னால் அமர்ந்திருக்க கடந்து சென்றனர் எப்படி என்றால் அந்த பையன் காலை இரண்டு புறமும் ஊன்றி ஊன்றி இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி ஊர்ந்து சென்றான் .. பின்னால் இருந்து பைக்கை மட்டும் பார்க்கும் போது பெட்ரோலுக்கு பதிலாக ஆல்ஹஹாலை நிரப்பி ஓட்டுவது போல இருந்தது .
அவர்கள் சென்றபோது அந்த பெண்மணியின் கால்கள் என்னுடைய பைக்கின் பின்புறம் நன்றாகவே மோதியது , கண்டிப்பாக மூன்று நிமிடங்கள் வலிக்கும் ,, (ஜெயமோகனின் யானை டாக்டர் படித்ததில் இருந்து வலியை கவனிக்கவும் கணக்கு போட்டு பார்க்கவும் பழகி உள்ளேன் - கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று .) அவர்களின் சேலை சக்கரத்திற்கு அருகில் இருப்பதை பார்த்த நான் வேகமாக அருகில் சென்று சொல்ல நினைத்தேன் , ஆனால் அதற்குள் பச்சை விளக்கு எரிய தொடங்கி விட்டது .
அந்த பையன் முன்னால் ரேஸ் சாம்பியன் போல அவ்வளவு வேகமாக சென்றான் .. நானும் ஒருவழியாக வலது பக்கம் துரத்தி கொண்டு சென்று சொல்லிவிட நினைக்கும் நேரத்தில் இடது பக்கம் இருந்து இன்னொரு பெண்மணி காரின் கண்ணாடியை இறக்கி அவர்களிடம் சொன்னார்கள் . அதற்குள் அடுத்த சிக்னல் வந்து விட்டது . அப்போது இரண்டு பேரும் அருகருகில் நின்று கொண்டிருந்தோம் .
பெண்மணியும் , பையனும் :
ஏன்டா இவ்வளவு வேகமா போய் தொலையற , கொஞ்சம் மெதுவாத்தான் போயேன் ,
அதுக்கு எதுக்கு பைக்கு , நடந்து போக வேண்டியதுதான ..
கொஞ்சம் இடிக்கமாதான் போ ,, கால் வலிக்குது பாருடா.
என்கூட வந்தா இப்படிதான் அதுக்குத்தான் அப்பவே சொன்னன்ல ..
நான் என்ன டெய்லியுமா சொல்றேன் , என்னைக்காவதுதான . மத்த நாள்ளெல்லாம் பஸ்சுலதான போறேன் .. உன்னைய புள்ளைய பெத்ததுக்கு ....
பேசாம உக்காருமா ,, கோவத்தா கிளப்பாத ..
அதற்குள் சிக்னல் கிளியராக மறுபடியும் சீறிக்கொண்டு செல்ல ஆரம்பித்தான் ..
நான் என் இடத்திற்கு வரும் வரை இந்த உரையாடலை யோசித்துகொண்டே வந்தேன் ..
அவனிடம் இருப்பது என்ன மாதிரியான அன்பு ..
அவனை பார்த்தால் எந்த வேலைக்கும் செல்வது போன்ற தோற்றம் இல்லை...
அவனுக்கு இந்த மாதிரியான காஸ்ட்லி பைக் (பல்சர் 200cc )எப்படி கிடைத்தது ..
அம்மாவை கூட்டி போவதற்கு எதற்கு இத்தனை கோவம் ...
எல்லா பிள்ளையை போலவும்தானே இவனும் பிறந்திருப்பான் ...
எனக்கு தெரிந்து ஒருவன் கெட்டு போக ஆரம்பிப்பது அவனது ஆறாம் வகுப்பில் ஆரம்பிக்கிறது ..அந்த நேரத்தில் கவனிக்காது சின்ன பிள்ளைதானே என்று விட்டவர்களெல்லாம் பின்னால் இப்படிதான் ..
(நீங்கள் கெட்டு போய் இருந்தால் நன்றாக யோசித்து பாருங்கள் ,, உங்கள் மனதின் முதல் தப்பான (நம் மனதிற்கு தவறு என தெரிந்து செய்வது ) எண்ணம் அந்த பருவத்தில்தான் வந்திருக்க வேண்டும் )
அவன் அவனுடைய அம்மாவை கொண்டு போய் பத்திரமாக சேர்த்து இருப்பானா ?
உங்கள்
G
No comments:
Post a Comment