சத்திய சோதனை
படிக்கும் போது
சத்தியமாய்
உன் நினைவுதான்
காந்தி
கல்லால் அடிக்கிறார்
கனவில் ...........
மறந்து விடத்தான்
நினைக்கிறேன்
ஆனால்
நினைப்பதை
மறக்க முடியவில்லை ......
பார்க்கும்
பெண்களின்
முகங்களிலெல்லாம்
படரும்
உன் முகம்
பார்க்கிறேன் ............
எவளிடமும்
இல்லாதது
அப்படியென்ன
உன்னிடம்
எப்படி இழந்தேன்
என்னை
உன்னிடம் ............
என் மகிழ்ச்சியை
எல்லாம்
மறைத்து கொண்டு
பார்க்கும் போது
மட்டுமே
பரிசளிக்கிறாய் ...........
என் கவிதை பூவிற்கு
விதை நீ
என் கற்பனை மழைக்கு
கருமேகம் நீ
என் மன அலைக்கு
கரை நீ ..........
ஐந்து நிமிட
இடைவெளியில்
ஆறு நிமிடம்
எடுத்து
உன்னை நினைக்கிறேன் .........
என்னை போல
எத்தனையோ பேர்
உன் வாழ்வில்
ஆனால்
உன்னை போல
ஒருத்திதான்
என் வாழ்வில்
இன்றல்ல
என்றும் ..............
No comments:
Post a Comment