Wednesday, 24 August 2011

கொஞ்சம் கவலை படாதே டைப் கவிதை எழுதி பார்க்கலாம் என்று இந்த முயற்சி - 1

கண் அருகில்
உள்ள
தூசி கூட
அகிலத்தையே  
மறைத்து விடும்
அரையடி
தள்ளி வைத்தால்
அது
காணமல் போய்விடும்
உன்
கவலைகளும் ..........

எல்லா துன்பத்திற்கும்
ஒரு
இன்பமான
முடிவு உண்டு
கண்டிப்பாய்
காலம் மாற்றும்...

மனதில் தோன்றியதை
மூளைக்கு
கொண்டு செல்
மனம்
லேசாகும்
ஆயிரம்
பிரச்சனைகளை
ஐந்து நிமிடத்தில்
தீர்க்க முடியும்
உன்னால் ...........

கவலைகளில்
கலங்காதிரு..
கண்டிப்பாய் மாறிவிடும்
இது
காலத்தின் கட்டளை .....

தினம்
கழட்டி எறியும்
ஆடைகளோடு
உன்
கவலைகளையும்
எறிந்து விடு ......

அன்புடன்
G





No comments:

Post a Comment