எனக்குள் தோன்றும் எண்ணங்களை எதாவது வழியில் சொல்லிவிட நினைத்து கொண்டே இருந்த தருணங்களுக்கு இன்று ஒரு முடிவு .
ஆம் நானும் எழுத போகிறேன்
(இருக்கும் எழுத்தாளர்கள் போதாதா என்று நீங்கள் நினைப்பது புரிந்தாலும் , என்னால் எழுதாமல் இருக்க முடியாது.)
உன்னால் முடியும்
என்றால் ஒருத்தி
உன்னால் முடியாது
என்றான் ஒருத்தன்
உன்னால் மட்டுமே முடியும்
என்றது மனது...............
எதை நான் எழுத
என்றேன்
எதையாவது எழுது
என்றது
எப்படி நான் எழுத
என்றேன்
எப்படியாவது எழுது
என்றது
காதல் கவிதை எழுத
நினைத்தேன்
கல்லறையில்
முடிந்தது
காமத்தை பற்றி
எழுத நினைத்தேன்
கட்டிலில்
முடிந்தது
வேறு என்ன எழுத
சமூகமா
அரசியலா
இல்லை
ஆன்மீகமா
இல்லவே இல்லை
ஏதேதோ எழுத
நினைத்து
எடுக்கின்றேன்
எழுதுகோலை
மீண்டும்
எடுத்த இடத்திலேயே
எறிகின்றேன்
எதை எழுத
நினைத்தாலும்
என்னை பற்றியே
எழுது
என எழுகிறது
அவள் முகம்........
அன்புடன்
G
No comments:
Post a Comment