Thursday, 25 August 2011

டூ வீலரும் மவுண்ட் ரோடும்

நான் ஒரு மென்பொருள் பொறியாளர் ,,  புரிகிறதா ,  இல்லை என்றால் நாம் அறிந்த தமிழ்  மொழியில் சொல்ல வேண்டுமென்றால் சாப்ட்வேர் ஆளு :-)

நான் தினமும் எனது டூ வீலரில் சுமார் 40  கிலோ மீட்டர் போய் வந்து கொண்டிருக்கிறேன் , முக்கியமாக தினமும் மவுண்ட் ரோட்டில் மூன்றில் முக்கா பங்கு தூரத்தை கடக்க வேண்டும் ,, அநேகமாக எல்லா சிக்னல்களும் எனக்கு சிவப்பு விளக்கை மட்டுமே காண்பிக்கும் :-)

அந்த நேரங்களில் எல்லாம் வைட்டமின் D  சத்து இலவசமாக  உள்ளே ஏறிவிடும் (இப்படித்தான் மனச தேத்திக்கணும்) . ஆனால் ஒவ்வொரு சிக்னலிலும்  என்னை சுற்றி இருப்பவர்களின் பேச்சை கேட்பதும் , செய்யும் கோணங்கிதனங்களும் சுவாரசியமாக இருக்கும் ,,, சில சமயம் சிரிப்பாகவும் சில சமயம் சோகமாகவும் சில சமயம் கேலியாகவும் இருக்கும் .

இன்று காலையில் தோன்றியதுதான் ஏன் இதை  நாம் நம் ப்ளாக்கில் போட (பதிவேற்றம் செய்வது )  கூடாது என்று ?

இதனால் சகலமனவருக்குயெல்லாம்  தெரிவிப்பது என்னவென்றால் உங்கள் நான் இன்று முதல் வேண்டாம் நாளை முதல் தினமும் நான் ரசிக்கும் ஒரு சம்பவத்தை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ள (கொல்ல) போகிறேன் . 

பின் குறிப்பு :
ஒருவேளை நீங்கள் மவுண்ட் ரோடு சிக்னல்களில் பேசியதும் வரலாம் ,
என்னை ஒட்டு கேட்பவன் என்று தப்பாக எண்ணி கேஸ் (Case not Gas ) போட்டு விடாதீர்கள் ,,
என் காதிற்கு எட்டும்படி பேசுவது உங்கள் குற்றம். :-)


அன்புடன்
G





No comments:

Post a Comment